வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம், தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கமைய இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட 100 பேரின் பங்குபற்றலுடன் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நுழையும் அனைத்து இடங்களிலும் வீதித் தடைகளுடன் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார ஆலோசனைகளுக்கமைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் மட்டுமே பாதுகாப்பு தரப்பினரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பிசிஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இல்லையென உறுதி செய்த பின்னரே அந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
நேற்று இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பித்த திருவிழா எதிர்வரும் 22 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.