
இலங்கையின் நிதி அமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று இருப்பதாக இன்று உறுதியாகியுள்ளது.
இதன்படி அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த நாட்களில் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.