இலங்கையில் தபால் திணைக்களத்தின் பணிகள் மட்டுப்படத்தப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி கிழமைக்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் சேவைகள் இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு அழைத்தல், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உள்ள பெண்களை பணிக்கு அழைக்காமை காரணங்களினாலும் மற்றும் தபால் சேவையில் ஊழியர்கள் சிலர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினாலும் தபால் சேவைகளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.