
நாட்டை முடக்க வேண்டாம். நாங்கள் பொறுப்பாக நடந்துகொள்கின்றோம் என்று மக்கள் கூறுவதனாலேயே நாட்டை முடக்காது வைத்திருக்கின்றோம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் நிலவரம் தொடர்பில் இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து கூறும் போதே இராணுவத் தளபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”இந்தநேரத்தில் நாட்டை முடக்குமாறு சிறிய குழுவினரே கூறிவருகின்றனர். ஆனால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் முடக்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். இதனால் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்தே முடக்காது இருக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.
இதன்படி மக்கள் தொடர்ந்தும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியுமாக இருக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி கொவிட் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.