July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்’; பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கொவிட் -19 இன் டெல்டா மாறுபாடு காரணமாக நாடு பேரழிவிற்குள் தள்ளப்படுவதை தடுக்க அரசு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியது.

நாட்டின் நிலைமை மிகவும் ஆபத்தாக உள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

சமீப நாட்களில் எட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் அதிகளவான சுகாதார துறை அதிகாரிகள் வைரஸ் தொற்றுக்குள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை 3,500 ஐ கடந்து செல்லுமானால், சுகாதார துறை நெருக்கடியை சந்திக்கும் அதேவேளை, நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

“அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதற்கு முன்பே கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் முக்கியம்” என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தினார்.

மேலும், பல்பொருள் அங்காடிகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் பெரும்பாலான பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணித்து நடந்து கொள்வதை காண முடிவதாகவும் அவர் கூறினார்.