February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைவிலங்குடன் வந்து மாமியாருக்கு இறுதி மரியாதை செலுத்திய ரஞ்சன்

(Photo: Facebook/ Harin Fernando)

நீதிமன்ற  அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இன்றைய தினம் (04) தனது நெருங்கிய உறவினரொருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் உறவினரின் கோரிக்கைக்கு அமைய  இறுதி சடங்கில் கலந்து கொள்ள நீதிமன்றம் விசேட அனுமதி வழங்கியதையடுத்து அவர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

அதன்படி, ரஞ்சன் ராமநாயக்க அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கை விலங்குடன்  இறுதிச் சடங்கிற்கு சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரப்பட்டார்.

அவரது மைத்துனர் ஒருவரின் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றிற்கே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் இந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.