இலங்கை இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்திருந்த நிலையில், எதிர்வரும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மீண்டும் இரசாயன உர இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யூரியா, நைட்ரேட் கலவை, கல்சியம் காபேனேட் போன்ற உரங்களை இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்யும் விதமாக வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் திருத்தியுள்ளார்.
இரசாயன உர பாவனையை முழுமையான நிறுத்தி, சேதன உர பாவனையை நோக்கி இலங்கை பயணிக்கும் என்று ஜனாதிபதி அறிவித்து, ஒரு மாதம் கடக்க முன்னரே மீண்டும் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.