November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக வலைத்தளங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகள் விரைவில் பாராளுமன்றத்திற்கு!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகள் அடங்கிய இறுதி வரைபை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகளை விதிப்பதற்கு தேவையான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையொன்று அடுத்த வாரத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து குறித்த ஒழுங்குவிதிகள் அடங்கிய இறுதி வரைபு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.