July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா காலத்தில் மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸின் போது பொது மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் வகையில் புதிய கையடக்க தொலைபேசி செயலியொன்று சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘செல்ப் ஷீல்ட்’ (Self Shield) என்றழைக்கப்படும் இந்த செயலியை இலங்கை சுகாதார தகவல் சங்கம் மற்றும் டிஜிட்டல் சுகாதாரத்துக்கான பொதுநலவாய நாடுகளின் மத்திய நிலையமும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த செயலியை பயன்படுத்திய சில நிமிடங்களில் குறித்த நபரின் உடல் நிலையை சரிபார்க்கவும், மருத்துவ அறிக்கைகளை பெறவும், அதன் மூலம் மருத்துவ உதவியை பெறவும் அவர்களுக்கு உதவும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த செயலியின் மூலம் பயனர்களுக்கு சுகாதார அமைச்சின் கொவிட் -19 வேலை திட்டத்துடன் இணைவதற்கு இடமளிக்கும்.தமக்கு தேவையான தரவுகளை மருத்துவ அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்.அவர்கள் அதற்கேற்ப பயனர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்தை வீட்டிலேயே கண்காணிக்க www.sshield.org இணையத் தளத்துக்கு  சென்று பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.