January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜகிரியவில் விபத்தை ஏற்படுத்திய பாடகி உமரியாவுக்கு பிணை!

ராஜகிரிய மேம்பாலம் அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்ட பிரபல பாடகி உமரியா சின்ஹவன்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

உமரியாவின் வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உமரியா இன்று (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதிக்கு 80,000 ரூபாவை இழப்பீடாக வழங்க பாடகி உமரியா சின்ஹவன்ச இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்ய கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.