இலங்கையில் மேலும் 56 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
18 பெண்களும் 38 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,380 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2,460 பேர் இன்று (30) இனங் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 6,662 .ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 27,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 75,212 ஆக உயர்வடைந்துள்ளது.