
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் போது ஒக்சிஜன் தேவை அதிகரித்திருந்தாலும், தடையின்றி ஒக்சிஜன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஹேமன்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் டெல்டா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், தேவையான அளவு ஒக்சிஜன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொரோனா பரவல் தீவிரமடையும் ஆபத்து நிலவுவதாகவும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.