January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தூக்கிச் சென்ற ஆலய உண்டியலை உடைக்க முடியாது விட்டுச் சென்ற திருடர்கள்!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலையத்தின் உண்டியலை தூக்கிச் சென்ற திருடர்கள் அதன் பூட்டை உடைக்க முடியாது இடையில் அதனை கைவிட்டு சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தின் பொருளாளர் இன்று காலை ஆலயத்திற்கு சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போயுள்ளமையை அறிந்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விமலரட்ண தலைமையிலான குழுவினர் விசாரணையை ஆரம்பித்த நிலையில், அந்த உண்டியல் கோவிலுக்கு முன்பகுதியிலுள்ள வயல்பகுதியில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது உண்டியலின் ஒரு பூட்டு உடைக்கப்பட்டுள்ள போதும், மற்றைய பூட்டு உடைக்கப்படாது இருந்துள்ளது.

திருடர்கள் முதலாவது பூட்டை உடைத்தபோதும் இரண்டாவது பூட்டை உடைக்க முடியாது அதனை அவ்விடத்திலேயே கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து உண்டியலை திறந்தபோது அதில் 19,820 ரூபா பணம் இருந்துள்ளது. அந்தப் பணத்தையும் உண்டியலையும் மீட்டு ஆலைய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.