இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் “டெல்டா” வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (26) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதிவாகும் தினசரி கொவிட் தொற்றாளர்களில் ஒரு குறிப்பிட்ட வீதமானவர்களில் “டெல்டா” வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது “டெல்டா” வைரஸால் பாதிக்கப்பட்ட 68 பேரும் பலரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இனங்காணப்பட்டவர்கள்.ஆனால் இந்த 68 ஐ விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாமது சமூகத்தில் இருப்பார்கள்.
நேற்று நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 1,666 பேரில் “டொல்டா” வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களும் அடங்குகின்றனர். எனினும் அதனை அறிவதற்கு ஒவ்வொருவரையும் அதற்கான விசேட பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
இது சாத்தியமற்றது.எனவே அனைவரும் “டெல்டா” வைரஸ் கொத்தணிகள் உருவாகாமல் இருக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக் கொண்டுள்ளார்.