January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை யாரும் அடிமைப்படுத்த முடியாது’; ஜீவன்

தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை யாரும் தொடர்ந்து அடிமைப்படுத்த முடியாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நம் நாட்டில் தொழிலாளர் கட்டளை சட்டம் 100 ஆண்டுகளுக்கும் மேலானது. எனவே, தொழிலாளர் கட்டளைச் சட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களில் பொருளாதார சிக்கல்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ள போதும் அதற்கான தீர்வு குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது அல்ல என்பதை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இஷாலினியின் மரணம் குறித்து பொலிஸ் விசாரணையை முறைப்படுத்த இன்று அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். அது ஒரு நல்ல விடயம்.ஆனால் சிலர் அரசியல் இலாபத்திற்காக இந்த சம்பவத்தை பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

பெருந்தோட்ட பகுதிகளில் குழந்தைகளின் கல்வி நிலையை அதிகரிக்கும் திட்டத்தை தாம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.