
அரசு நிறுவனங்களின் செலவினங்களை ஆறு மாத காலத்திற்கு கடுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கூடுதல் செலவுகளை உடனடியாக நிறுத்துமாறு நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, புதிய ஊழியர்களை இணைத்து கொள்வதை நிறுத்துமாறும் நிதி அமைச்சு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அரசாங்கத்தின் வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளமையை கருத்தில் கொண்டு நிதி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கிடையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் அனைத்து மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களையும் சந்தித்து செலவினங்களை குறைக்க அறிவுறுத்தினார்.
அரசு நிறுவனங்களின் மேலதிக செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.