July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அந்தந்த நாடுகளில் அனுமதிக்கப்படும் தடுப்பூசிகளை வழங்க முடிவு!

செல்லுபடியாகும் விசாவுடன் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு, செல்லவிருக்கும் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஏற்கனவே சில நாடுகள் தடுப்பூசிகளை காரணம் காட்டி இலங்கையர்களை வேலைக்காக நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்திருந்தது. இதையடுத்து பலரின் வெளிநாட்டு பயணம் தடைப்பட்டது.

இந்நிலையில், அனேகமான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட “பைசர்” தடுப்பூசியை தொழில்களுக்காக வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு வழங்க சுகாதார அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி, சுமார் 8,000 தொழிலாளர்கள் 15 நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

“கொழும்பில் இதற்கான பிரத்தியேக தடுப்பூசி மையங்களில் அவர்கள் 1 ஆவது மற்றும் சரியான இடைவெளியில் வழங்கப்படும் 2 வது டோஸை பெற்றதன் பின்னர், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.