பாராளுமன்றத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்திய செய்ய தியாவண்ணா ஏரியில் சூரிய சக்தியினால் இயங்கும் மிதக்கும் மின் பிறப்பாக்கியை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியுடன் தியாவண்ணாவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“1.5 மெகா வோட்ஸ் திறன் கொண்ட சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கியானது பாராளுமன்ற வளாகத்தின் அன்றாட மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணிக்க எதிர்பாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது” என்றார்.
இலங்கை மின்சார சமை (சி.இ.பி.) நுகர்வோருக்கு தடையற்ற, தரமான மற்றும் மலிவான விலையில் மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்கான முழு தீவையும் உள்ளடக்கிய பல திட்டங்களை தொடங்கியுள்ளதாகவும் மின் சக்தி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின் உற்பத்தி 70% அதிகரிக்கும் இலக்கை அடையும் எனவும் மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
“அத்தோடு, இலங்கை மின்சார சபை நாட்டின் பல நீர்த்தேக்கங்களை மையமாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் கூறினார்.
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் ஒன்று கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.