
தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான புதிய திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டதோடு, பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இவ்வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பித்து, டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய பரீட்சைகள் இரண்டுமே இவ்வாறு நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.