January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு சமுத்திர பாதுகாப்பு கண்காணிப்புத் தொகுதியை வழங்கியது அவுஸ்திரேலியா

சமுத்திரப் பாதுகாப்புக்கு உதவும் பல நாள் படகுக் கண்காணிப்புத் தொகுதி ஒன்றை, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

முதலாவது கண்காணிப்புத் தொகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி கையளித்துள்ளார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்தல், நாட்டின் எல்லைகள், இந்து சமுத்திர வலயப் பாதுகாப்பு, படகுகள் மூலம் மேற்கொள்ளப்படும் மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுத்தல் போன்றவற்றுடன், அனர்த்தத்துக்கு உள்ளாகும் படகுகளை இனங்கண்டு மீனவர்களைக் காப்பாற்றுவதற்கு இந்தக் கண்காணிப்புத் தொகுதி பெரிதும் உதவுமென இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட உள்ள கண்காணிப்பு மத்திய நிலையத்துக்குத் தேவையான அனைத்து வகையான கருவிகள், செட்டலைட் தொழிநுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக, 5.38 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு பொருத்தப்பட்டு, தற்போது செயலிழந்துள்ள இதுபோன்ற 1,250 கண்காணிப்பு கருவிகளை நவீனமயப்படுத்துவதற்கு உதவுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவுஸ்திரேலியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் மைய பொருளாதாரக் கொள்கையை பலப்படுத்தி, சர்வதேச தரத்துக்கேற்ப மீன் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இந்தக் கண்காணிப்பு முறைமை பெரிதும் உதவுமென புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைத் தலைவர் சரத் தாஸ் தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.