இலங்கையில் ரயில் ஊழியர்கள் பலர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்களிடையே தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் வேகத்தை பார்க்கும் போது, மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தை கொத்தணிகளை போன்று ரயில்வே கொத்தணியொன்று உருவாகும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று அச்சம் காரணமாக தற்போது வரையில் 20 முதல் 25 வரையிலான ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போது பயணக் காட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் ரயில்களில் கூட்டமாக பயணிப்பதாலும் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.