January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு!

ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க உறுப்பினர்களை கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் கடந்த 12 ஆம் திகதி முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்படி இணையம் ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு இணையம் ஊடாகவே ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் தற்போதைய போராட்டத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.