சட்டமா அதிபர் திணைக்களத்தின் 7 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களான மிலிந்த குணதிலக, ஹரிப்பிரியா ஜயசுந்தர, விகும் ஆப்ரூ, சானக விஜேசிங்க, ரவிந்திர பதிரனகே, நெரின் புள்ளே மற்றும் சேதிய குணசேகர ஆகியோரே, ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) பிரிவின் கீழ் சட்டத்தரணிகளின் தொழில்வாண்மையை விசேட நிலைக்கு தரமுயர்த்துவதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்துக்கு அமைய இவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் விரைவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதுடன், புதிய நியமனங்கள் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.