
ஹெரோயின் போதைப் பொருளுடன் மஹர சிறைச்சாலையின் சிறைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 96 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் செல்லும் போது, நுழைவாயிலில் இருந்த அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்திய போது அவர் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்படி அவரை கைது செய்துள்ள சிறைச்சாலைகள் அதிகாரிகள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறைக் காவல் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.