January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: ஜேவிபியின் முன்னாள் எம்.பிக்கள் இருவர் கைது!

ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சமந்த வித்யாரட்ண மற்றும் நாமல் கருணாரட்ண ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் மேலும் மூன்று பேர் கைதாகியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உரம் தொடர்பான பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளினால் ஜுலை முதலாம் திகதி பொரலந்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் கொவிட் கட்டுப்பாட்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சமந்த வித்யாரட்ண மற்றும் நாமல் கருணாரட்ண உள்ளிட்ட ஐந்து போரை இன்று காலை போஹக்கும்புர பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.