July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி’

மேல் மாகாணத்தில், 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை செலுத்துமாறு சுகாதாரத் துறைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

தடுப்பூசி திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கொவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிக்குழுவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்வனவுக்கான கட்டளைகள் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதும்,  முறையான திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதத்திற்கு முன் நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் அதிக சதவீதத்தில் தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாம் டோஸூக்குத் தேவையான அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவருக்கும் அதன் 2 ஆவது டோஸை முறையாக வழங்குவதற்குத் திட்டமிடுமாறும் ஜனாதிபதி, சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக  ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் தற்போது வரை 2,889,602 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸூம் மற்றும் 1,146,978 பேருக்கு தடுப்பூசியின் 2 ஆவது டோஸூம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிக்கின்றது.

இதில், 30 வயதுக்கு மேற்பட்ட வயதினரில் கொழும்பு மாவட்டத்தில் 60 வீதமானவர்களுக்கும், கம்பஹா மாவட்டத்தில் 47 வீதமானவர்களுக்கும், மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 34 வீதமானவர்களுக்கும், கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.