குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர பொலிஸ் சேவையில் இருந்து இன்று ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாக சுமார் 35 ஆண்டுகள் கடமையாற்றிய அவர், பல முக்கியமான வழக்குகளை விசாரணை செய்த இரகசிய பரிசோதகர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இதனிடையே, 60 வயதை எட்டிய பின்னர் அவர் பொலிஸ் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தொழிலதிபர் ஷியாம் கடத்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியங்களை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஷானி அபேசேகர அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிற்கு அவர் கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.