November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்-பிரஸ் பேர்ஸ் கப்பலின் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் ஆரம்பம்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதை தொடர்ந்து நாட்டின் கடற்பரப்பில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீன்பிடி சமூகத்துக்கு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக இந்திய கப்பல் ஒன்று ஆய்வுகளை மேற்கொள்வதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-பிர்ஸ் பேரல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், கப்பல் தீப்பற்றியதை தொடர்ந்து நாட்டின் கடற்பரப்பில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை தேடும் நடவடிக்கைகளுக்காக இந்திய கப்பல் கடந்த 25 ஆம் திகதி இலங்கை வந்தது.

இதனையடுத்து, 26 ஆம் திகதியில் இருந்து குறித்த கப்பல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் இந்த ஆய்வுகள் இடம்பெறும்.

இதனால் இந்த நாட்களில் குறித்த கடற் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை மற்றும் களுத்துறை உள்ளிட்ட கடல் பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.