January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்: ஒரே நாளில் 12 மரணங்கள்!

File Photo

வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் இலங்கையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் காயமடைந்த 8 பேரும், அதற்கு முந்தைய நாட்களில் விபத்துக்களில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு பேரும் நேற்றைய தினத்திற்குள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறு உயிரிழந்த 12 பேரில் 8 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இலங்கையில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையையே எடுத்துக் காட்டுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.