
வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
எரிபொருள் விலையேற்றம், விவசாயிகளுக்கான பசளை தட்டுப்பாடு, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, காணிகளை கையகப்படுத்தல், வெளிநாட்டவர்களின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையைச் சேர்ந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு அருகில் இருந்து துவிச்சக்கர வண்டிகளிலும் வேறு வாகனங்களிலும் சுலோக அட்டைகளுடன் கோஷங்கள் எழுப்பியவாறு வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை வரையில் பேரணியாக சென்றனர்.
பின்னர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் கூடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.