January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் பணிபுரிந்த 142 இலங்கையர்கள் கொரோனாவுக்கு மரணம்!

வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற 142 இலங்கையர்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் 4,800க்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், அவர்களில் 4600 பேர் குணமடைந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மங்கள ரந்தெனிய கூறினார்.

அத்துடன், மத்திய கிழக்கு உட்பட 16 நாடுகளில் இருந்து கொரோனா உயிரிழப்புகளும், தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து விட்டு தொழிலுக்கு சென்றவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.