May 26, 2025 2:12:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை முழுவதும் எப்போது வேண்டுமானாலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம்’; இராணுவ தளபதி

நாட்டில் பதிவாகும் கொரோனா நோய்த் தொற்று மற்றும் இறப்பு நிலைவரங்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் முழுமையான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முன்னரை போன்று மீண்டும் மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் எந்த ஒரு ஒன்று கூடல்களையும் நடத்த அனுமதிக்கப்படாது.

சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.