கொழும்பு, மோதரை பகுதியில் ஹெரோயின் வகை போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு ஊழல் எதிர்ப்புப் பிரிவு மேற்கொண்டு சுற்றிவளைப்பு ஒன்றின் போதே, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
25 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் இருந்து 1 கிலோ மற்றும் 21 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் தொகையின் மதிப்பு 10 மில்லியன் ரூபாய்களாகும்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், 7 நாட்கள் வரை தடுப்பு உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.