சீனாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருமளவான சிகரெட்டுகள் சுங்கப் பிரிவினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இயந்திர உதிரிப் பாகங்கள் என்று கூறி சீனாவில் இருந்து இந்த சிகரெட்டுகளை இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்புத் துறைமுகத்தில் இருந்து, மத்திய சுங்க பொருட்கள் பரிசோதனைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்த கொள்கலன் பெட்டியொன்றை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுள்ளனர்.
அந்த பொதிகளை பரிசோதித்த போது, அவற்றில் இருந்து 24.8 மில்லியன் ரூபா பெறுமதியான சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 276,000 சிகரெட்டுகளை மீட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனை இறக்குமதி செய்தவர்களை அடையாளம் காண்பதற்காக மத்திய சுங்கப் பரிசோதனை பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.