
நாட்டின் பல பாகங்களில் நேற்று (21) இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பாதசாரிகள், மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பேர், சைக்கிளில் சென்ற இருவர் மற்றும் லொறியில் பயணித்த ஒருவர் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் எட்டு பேர் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துகளிலும், ஏனையவர்கள் அதற்கு முன் இடம்பெற்ற வாகன விபத்துகளிலும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளொன்றுக்கு வாகன விபத்துகளினால் 11 பேர் மரணிப்பது சாதாரண ஒரு விடயம் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வாகன விபத்துக்கள் தொடர்பில் அவதானத்துடன், பொதுமக்கள் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.