இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து எதிர்க்கட்சி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிரணி ‘இப்போது சந்தோசமா’ என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு கோட்டையில் உள்ள கட்சித் தலைமைகத்தில் இருந்து பாராளுமன்றம் வரை வாகான அணிவகுப்பாக சென்றுள்ளனர்.
எரிபொருள் அதிகரிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டி, எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.