ஒரு இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டிலுள்ள அரிசி வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்து விலையை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலேயே வெளிநாட்டில் இருந்து அதனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் அரிசி விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் என்பதுடன், குறைந்த விலையிலும் மக்களுக்கு அதனை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.