இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த 24 பேரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த நிலையில், இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளாரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி இவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சிவப்பு அறிவித்தலுக்கு அமைய, இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.