June 14, 2025 8:26:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தின் தாக்கங்களை ஆராய ஐநா சுற்றாடல் திட்ட குழு இலங்கை வருகை

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தின் சுற்றாடல் தாக்கங்களை ஆராய்வதற்கான ஐநா சுற்றாடல் திட்ட குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஐநா சுற்றாடல் திட்டத்தின் 4 விசேட நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தின் சுற்றாடல் தாக்கங்களை ஆராயும் களப் பயணத்தை ஆராம்பித்துள்ளது.

ஐநா சுற்றாடல் திட்ட குழு சேத மதிப்பீடு மற்றும் மீட்புக்கான செயன்முறைகளில் இலங்கைக்கு உதவவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

ஐநா சுற்றாடல் திட்ட குழு இன்று உஸ்வடகெய்யாவ கடற்கரையில் களப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளதோடு, அமைச்சர் நாலக கொடஹேவா உட்பட இலங்கை அதிகாரிகளுடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது.