களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சீருடையுடன் 50 கிலோ கிராம் ஹெரோயின் வகை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போதே, இவர் ஹிக்கடுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று 52 கிலோ கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் ஒழுங்கடைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தென் பகுதிகளான அஹங்கம, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம பிரதேசங்களில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.