November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலையேற்றத்தால் முட்டை உற்பத்தியாளர்கள் பாதிப்பு!

எரிபொருள் விலையேற்றத்தால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையான நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கோழிகளுக்கு வழங்கப்படும் ஒரு கிலோ தீனியின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிப்பட்டமை முட்டை உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க  கூறினார்.

இதனால், கோழி முட்டை உற்பத்தியை தொடர இயலாமை காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளின் விலை உயரும் அபாயம் உள்ளது மற்றும் கோழி முட்டை தொழிலில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (17) தெரிவித்தார்.

மேலும், பால்மாவின் விலையை அதிகரிக்கக் கோரி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நிதி அமைச்சின் செயலாளருக்கு நேற்று கடிதம் அனுப்பியிருந்தது.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட பால்மா ஒரு கிலோ பக்கெட் 350 ரூபாவாலும், 400 கிராம் பக்கெட் 140 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இதற்கிடையில், சந்தையில் காய்கறிகள் மற்றும் அரிசியின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதேபோல, சமையல் எரிவாயு நிறுவனங்களும் விலை உயர்வை எதிர்பார்க்கின்றன.

மேலும், மக்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் விலைகள் சிக்கலாகி விட்டதாகவும் மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.