அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸாக அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலோபாய முகாமைத்துவம் தொடர்பான பிரதானி அலெஜன்ட்ரோ க்ராவியோடோ (Alejandro Cravioto) தெரிவித்துள்ளார்.
மெய்நிகர் கேள்வி பதில் அமர்வொன்றின்போது, கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய ஆய்வுகளில், இந்த கலவை மற்றும் பொருத்தப்பாடு என்பன நன்மை பயக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அஸ்ட்ரா செனிகாவின் முதல் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு பைசர் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக இணைத்து செலுத்துவது கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பின் அளவை இரட்டிப்பாக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் செயல்திறன் அளவு 97 சதவீதமாக காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.