கொரோனா வைரஸ் சிவப்பு பட்டியல் நாடுகளான இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் மக்களுக்கு வேலை அனுமதி வழங்குவதை பஹ்ரைன் காலவரையறையின்றி நிறுத்தியுள்ளதாக தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதிநிதி ஒருவர்தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள நபர்கள் பஹ்ரைனில் பணி அனுமதி பெற முடியாது என்றும் அவர் கூறினார்.
மேற்படி தீர்மானம் கடந்த மே 24 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டது என்றும் எப்போது இந்த முடிவு நீக்கப்படும் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் வர மேலும் தெரிவித்தார்.
“சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் குடியுரிமை பெற்ற நபர்கள் பஹ்ரைனுக்குள் வசித்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பணி அனுமதிகளை புதுப்பிக்க முடியும். மேலும்,சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து வரும் பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் பஹ்ரைனுக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்குள் குறித்த பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனையை செய்திருக்கவேண்டும்.
மேலும்,பஹ்ரைனுக்கு வரும் தடுப்பூசி போடாத அனைத்து பயணிகளுக்கும் கட்டாய தனிமைப்படுத்தலை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதற்கமைய
பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும், பின்னர் 10 நாட்கள் வீடு அல்லது விடுதிகளில் தனிமைப்படுத்தலை முடிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்..