May 24, 2025 19:55:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 63 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே 23 ஆம் திகதி முதல் ஜுன் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 30 பெண்களும், 33 ஆண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் மேலும் 2,340 பேருக்கு நேற்றைய தினத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 221,263 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை தொற்றில் இருந்து நேற்று வரையில் 186,516 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.  தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களில் 32,625 தொற்றாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று வரையில் 2,259,385 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.