January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடல் வழியாக கனடா செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 38 பேர் கர்நாடகாவில் கைது

Photo: ANI Twitter

கர்நாடக மாநிலம் மங்களூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையைச்  சேர்ந்த 38 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மங்களூர் பொலிஸ் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதல் கட்ட விசாரணையில் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு வழியாக பெங்களூர் வந்து பின்னர் மங்களூருக்கு வந்துள்ளார்கள் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இலங்கை நாட்டவர்களுக்கு உதவி செய்த ஏழு பேரை கைது செய்துள்ளதாக மங்களூர் பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.