இலங்கைக்கு இந்த வருடத்தில் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்காக 7600 கோடி ரூபா தேவைப்படுவதாக, அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனை கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசிகள் பல டோஸ்கள் செலுத்தப்பட வேண்டுமென கூறும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்காக முன்பதிவுகளை தற்போதே முன்னெடுத்து வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கையும் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த வருடத்திற்காக மாத்திரம் இலங்கைக்கு 7600 கோடி ரூபா தேவையாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.