
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 67 பேர் மரணங்கள் பதிவாகியுள்ளன.
மே 17 ஆம் திகதி முதல் ஜுன் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குவதாகவும் இவர்களில் 6 பேர் வீடுகளிலும், 5 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதும், 56 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மேலும் 2,716 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 213,396 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றியோரில் 2,168 பேர் நேற்று பூரண குணமடைந்தனர். இதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,80,427 ஆக அதிகரித்துள்ளது.