
இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளின் போது சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் ‘பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மட்டம் – 1 ஹோட்டல்களில்’ (“Safe and Secure Level 1 Hotels”) மதுபான விற்பனையை மேற்கொள்ள மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஹோட்டல்களில் மது விற்பனைக்கு அனுமதியை வழங்குமாறு மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர்களுக்கு மதுவரி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சுகாதார மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தமது மது விற்பனை உரிமங்கள், அனுமதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது அருகிலுள்ள உரிமம் பெற்ற மொத்த விநியோகஸ்தர்களிடமிருந்து மதுபானங்களை பெறுவதற்கு ‘பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மட்டம் – 1 ஹோட்டல்களுக்கு’ மதுவரி திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடுபூராகவும் மற்றைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.