கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பிரதேசங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, கம்பஹா, நுவரெலியா, திருகோணமலை, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளிலேயே இவ்வாறு தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாடுபூராகவும் தொடரும் பயணக் கட்டுப்பாடு எவ்வித தளர்வும் இன்றி எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் தொடரும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.