
இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதிலும், கடந்த 24 மணி நேரத்திற்குள் பதிவான வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் நால்வர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்றும், ஏனைய இருவர் முச்சக்கர வண்டி சாரதிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலத்திலும் வீதி விபத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மே 21 ஆம் திகதி முதல் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளுடன் தொடர்புடையவர்கள் பணிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.